Latestமலேசியா

69-வது தேசிய தினத்தையொட்டி மலாக்காவில் 13 சுற்றுலாத்தளங்களில் இலவச அனுமதி

மலாக்கா, ஆகஸ்ட்-25-இம்மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 69வது தேசிய தினத்தை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க மலாக்கா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 சுற்றுலாத்தளங்களில் இலவசமாக நுழைய அனைத்து பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

Taming Sari கோபுரம், மலாக்கா River Cruise, சுங்கை லிங்கி Eco Cruise, மலாக்கா அருங்காட்சியக வாரியத்தின் கீழுள்ள அருங்காட்சியகம், மலாக்கா மிருகக்காட்சி சாலை, மலாக்கா மலேசிய சிறைச்சாலை அருங்காட்சியகம், மலாக்கா கைவினை வளாகம், கடேக் வெந்நீர் ஊற்று வளாகம், மலாக்கா Wonderland & Themepark, ஆயர் கெரோ கண்ட்ரி கிளப், தியாரா மலாக்கா கோல்ஃப் & கண்ட்ரி கிளப் ஆகியவை அவ்விடங்களில் அடங்கும்.

தங்களின் விடுமுறைத்தளமாக மலாக்காவைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மாநில அரசு வழங்கும் பாராட்டு அங்கீகாரமாக அச்சலுகை அமைவதாக முதலமைச்சர் Datuk Seri Ab Rauf Yusof தெரிவித்தார். எனவே தங்கள் குடும்பத்தினருடன் மலாக்காவிற்குச் சென்று அவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, வரும் சனிக்கிழமை Klebang, Dataran 1 Malaysiaவில் நடைபெறும் Habib Syech Abdul Qodir Assegafவின் Melaka Berselawat நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு Ab Rauf மாநில மக்களைக் கேட்டுக் கொண்டார். தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அந்நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!