Latestமலேசியா

நெகிரி செம்பிலானில் ஆட்சிக்குழு உறுப்பினர் அந்தஸ்துடன் இந்திய விவகார சிறப்பு அதிகாரியாக டத்தோ V.S. மோகன் நியமனம்

சிரம்பான், ஆகஸ்ட்-17,நெகிரி செம்பிலானில் இந்தியர் நலன் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக, ஆட்சிக் குழு உறுப்பினர் அந்தஸ்தில் டத்தோ V.S.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ம.இ.காவின் பரிந்துரையின் பேரில் செய்யப்பட்டுள்ள இந்நியமனம் செப்டம்பர் 1-ஆம் தேதி அமுலுக்கு வருகிறது.

மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் நேற்று அதனைச் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

ஜெராம் பாடாங் முன்னாள் சட்டமன்றத் உறுப்பினரான மோகன், முந்தைய தேசிய முன்னணி காலத்து ஆட்சியில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.

இப்படி அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் அனுபவம் வாய்ந்தவரான மோகனின் நியமனம், ஆட்சிக் குழுவில் இந்தியர் இல்லாத குறையைத் தீர்க்கும் என்பதோடு, நெகிரி இந்தியர்களின் நலன்களைக் காக்கும் என இஸ்மாயில் லாசிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அண்மைய மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட இரு ம.இ.கா வேட்பாளர்களும் தோல்வியுற்றதால், அக்கூட்டணி ஆட்சியமைத்தும் அதில் இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் இடம்பெற முடியாமல் போனது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!