Latestமலேசியா

புத்ராஜெயா தேசிய தின அணிவகுப்பு இடத்தில் கலாட்டா: போலீஸ் தீவிர விசாரணை

புத்ராஜெயா, செப்டம்பர்-2-புத்ராஜெயா தேசிய தின அணிவகுப்பு கொண்டாட்டத்தின் போது, பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

​ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 5 மணியளவில் சதுக்கத்தின் நுழைவாயில் திறக்க காத்திருந்த பொது மக்கள் மத்தியில், ஆரஞ்சு நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் தள்ளுமுள்ளுவை ஏற்படுத்தியுள்ளார்.

​அத்துடன், தடுப்புச் சுவர்களைத் தாண்டிச் செல்லுமாறு அவர் மக்களைத் தூண்டியதோடு, அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் தகாத முறையில் சத்தமிட்ட வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியுள்ளன.

​இது தொடர்பாக ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மொத்தம் 4 போலீஸ் புர்கள் பெறப்பட்டதாக, புத்ராஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ACP Aidi Sham தெரிவித்தார்.

​பொது அமைதிக்கு ஊறு விளைவித்தல், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் மற்றும் சிறு சிறு குற்றங்களுக்கான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

​சம்பந்தப்பட்ட நபரை புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்திற்கு வந்து வாக்குமூலம் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், பொது மக்களும் தகவல்கள் ஏதும் வைத்திருப்பின் விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!