Latestஉலகம்

நேப்பாள பெரு வெள்ளம்: இடிபாடுகளுக்குள் 10 நாட்கள்… 64 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு

காட்மண்டு, செப்டம்பர்-6,நேப்பாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பிறகு, 10 நாட்கள் கழித்து சீனப் பிரஜை ஒருவரும் 64 வயது நேப்பாள மூதாட்டியும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.

​அப்பர் திரிசூலி-1 நீர்மின் திட்டப் சுரங்கப் பாதைக்குள் 225 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த Luhaitao என்ற சீன ஆடவரை இராணுவத்தினரும் வெளிநாட்டு மீட்புக் குழுவினரும் பத்திரமாக மீட்டனர்.

அதே சமயம், தரைமட்டமான குடியிருப்பு இடிபாடுகளுக்குள் மயங்கிய நிலையில் 64 வயது சந்திகா குமாரி (Chandika Kumari) மீட்கப்பட்டார்.

அக்காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், அம்மூதாட்டி ஹெலிகாப்டர் மூலம் இராணுவ முகாமுக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

​ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பே இந்த திடீர் வெள்ளத்திற்கு காரணமாகும்.

​இந்த பேரழிவில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,375 ஆக உயர்ந்துள்ள நிலையில், மலேசியர்கள் உட்பட 5,500க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், நீர்மின் திட்டப் பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான ஊழியர்களைத் தேடும் பணி தீவிரமாகத் தொடருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!