Latestமலேசியா

மாரான் endurance போட்டியில் மூச்சுத்திணறல்: UiTM பல்கலைக்கழக மாணவர் பரிதாப மரணம்

மாரான், செப்டம்பர்-7,பஹாங்கில் நடைபெற்ற Endurance விளையாட்டுப் போட்டி, கடைசியில் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.

​மாரானில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற 21 வயது UiTM பல்கலைக்கழக மாணவர் ஒருவர், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

Endurance சவால் என்பது ஒரு வீரரின் உடல் மற்றும் மன வலிமையை, நீண்ட நேரத்திற்குத் தொடர்ந்து சோதிக்கும் ஒரு நீண்டதூரப் போட்டியாகும்.

இதில் வேகத்தை விட, சோர்வடையாமல் நீண்ட நேரம் தொடர்ந்து செயல்படும் தாங்குதிறன் (Stamina) மிக முக்கியமானதாகும்.

அவ்வகையில், ​UiTM Jengka ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான KKEC டூயத்லான் போட்டியின் Mara Lasak நிகழ்வில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பங்கேற்றபோது Fadhlan Fakhry Solana Mohd Fellimal எனும் மாணவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக Jengka மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஆக்சிஜன் அளவு குறைந்ததால் தெமர்லோவில் உள்ள சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை பிற்பகல் அவர் உயிரிழந்தார்.

​அவருடன் பங்கேற்ற மேலும் 8 மாணவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சீரான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மற்ற 6 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

​இச்சம்பவம் குறித்து சவப்பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள மாரான் போலீஸ், சமூக வலைத் தளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனப் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், தற்போது நிலவும் வெப்பமான மற்றும் புகைமூட்டமான சூழலைக் கருத்தில் கொண்டு, கடுமையான வெளிப்புறப் பயிற்சிகளையும் செயல்பாடுகளையும் தவிர்க்குமாறு அது அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!