Latestமலேசியா

குவாந்தான் குழந்தைப் பராமரிப்பு மையத்தில் 2 வயது சிறுவன் துன்புறுத்தல்: 31 வயது பெண் கைது

குவாந்தான்,செப்டம்பர்-7,குவாந்தானில் உள்ள ஒரு குழந்தைப் பராமரிப்பு மையத்தில் 2 வயது சிறுவன் திட்டப்பட்டு, தலைமுடி இழுக்கப்பட்டு, தலை உலுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, அங்குள்ளப் பணியாளரான 31 வயதுப் பெண் ஒருவரைப் பஹாங் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

​நேற்று காலை இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குவாந்தான் மாவட்டப் போலீஸ் அதிகாரி அஷாரி அபு சமா தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடந்துள்ளது.

நல்லவேளையாக, ​மருத்துவப் பரிசோதனையில் சிறுவனுக்குப் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேல் விசாரணைக்காகச் சந்தேக நபரைக் காவலில் எடுக்கப் போலீஸார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!