Latestஇந்தியா

இந்தியப் பிரதமர் மோடிக்கு மும்பையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்; துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மும்பை, செப்டம்பர் 8 — இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, பிரதமர் அலுவலக அதிகாரியாக நடித்து பாதுகாப்பு வளாகத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஒருவர் மற்றும் அவருடன் துப்பாக்கியுடன் வந்த மற்றொருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மும்பையின் Bandra Kurla Complex பகுதியில் உள்ள Nita Mukesh Ambani Cultural Centre-ல் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் சோதனையின் போது, ரோஹன் பரேக் என அடையாளம் காணப்பட்ட நபரிடம் பிரதமர் அலுவலகத்தின் போலி அடையாள அட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அடையாள அட்டையை அதிகாரிகள் சரிபார்த்தபோது அது போலியானது என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் ‘பாதுகாவலராக’ வந்த நபரிடமிருந்து துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

இதனிடையே போலி அடையாள அட்டை மற்றும் ஆயுதத்துடன் அவ்வருவரும் அந்த இடத்திற்குள் நுழைய முயன்றதற்கான காரணம் குறித்து மும்பை குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

Global Fintech Fest 2026-ஐ தொடக்கி வைத்து உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி மும்பையின் Jio World Centre-க்கு வரவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால், பாதுகாப்பு தரப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!