
தாய்லாந்திலுள்ள பாலர் பள்ளியில் 48 வயது ஆசிரியை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை சுமார் 11 மணியளவில் பள்ளிக்குள் சென்ற அவரது கணவர், அங்கு ஆசிரியையாக பணியாற்றிய மனைவியை சுட்டதாக போலீசார் தெரிவித்தனர். சந்தேகநபர் ஒரு காவல்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்று அருகிலுள்ள தனது வீட்டுக்குச் சென்ற பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில், பள்ளியில் இருந்த 44 குழந்தைகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஆசிரியரின் உடல் பள்ளி உணவகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



