
ஜகார்த்தா, செப்டம்பர்-11,அண்மையில் வெடித்துச் சிதறிய அனாக் கிராகாத்தாவ் எரிமலை இரண்டாவது உயர் மட்ட எச்சரிக்கை நிலையில் நீடிப்பதால், இந்தோனேசியாவின் Lampung கடற்கரைப் பகுதிகளில் சுனாமி ஆயத்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சுண்டா நீரிணையில் உள்ள தெற்கு Lampung கடலோரப் பகுதிகளில் வெளியேற்றப் பாதைகள், பாதுகாப்பான மையங்கள் மற்றும் சுனாமி எச்சரிக்கைச் சைரன் ஒலி சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உறுதிச் செய்து வருகின்றனர்.
அதோடு, எரிமலைப் பள்ளத்தைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்ல மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பரவிய எரிமலைச் சாம்பல் காரணமாக Lampung, ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளில் 68,000-க்கும் மேற்பட்டோருக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
1,200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, சுவாசக் கவசங்கள் மற்றும் மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.



