Latestமலேசியா

GST-யை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: ஸாஹிட் வலியுறுத்தல்

கோலாலம்பூர், செப்டம்பர் 11 — நாட்டின் வரி முறையை மறுசீரமைத்து, சரக்கு மற்றும் சேவை வரியான GST முறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டுமெ ன அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி (Datuk Seri Dr Ahmad Zahid Hamidi) வலியுறுத்தியுள்ளார்.

GST மற்றும் விற்பனை மற்றும் சேவை வரியான SST ஆகிய இரண்டையும் இணைத்து கலப்பு வரி முறையை அமல்படுத்தும் யோசனைக்கு அவர் கேள்வி எழுப்பியதுடன், இதுபோன்ற முறையை எந்த நாடும் பின்பற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

2026 அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய ஸாஹிட், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை “குரு” எனக் குறிப்பிட்டு, மக்கள் கருத்தை செவிமடுத்து GST-யை மீண்டும் கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.

“குரு, மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேளுங்கள். வரி முறையை மறுசீரமைத்து, மீண்டும் GST முறைக்கு மாற்றுங்கள்,” என அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!