
ஈப்போ, செப்டம்பர்-13-ஈப்போவில் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டுக்குள் 57 வயது ஆடவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சனிக்கிழமை மதியம் Pasir Puteh, Taman Desa Pakatan, Persiaran Pengkalan Ria 8 எனுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பூட்டப்பட்ட கதவைத் திறக்கப் போஸாருக்கு உதவ தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பிரிவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
கதவை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகளுக்கு, அங்கு ஒருவர் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் அவர் இறந்துவிட்டதை உறுதிச் செய்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்த பொது மக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



