
கோலாலம்பூர், செப்டம்பர்-14-மலேசியாவில் நெட்ஃபிலிக்ஸ் (Netflix) பயனர்களுக்கு ஒரு முக்கிய செய்தி.
பிரபல OTT தளமான நெட்ஃபிலிக்ஸ், அதன் அனைத்து சந்தா கட்டணங்களையும் உயர்த்தியுள்ளது.
அவ்வகையில், இதுநாள் வரை 18.90 ரிங்கிட்டாக இருந்த Mobile திட்டம் இனி RM19.90-ராக மாறும்
29.90 ரிங்கிட்டிலிருந்த Basic திட்டம் இனி RM33.90-ராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Standard திட்டம் RM55.90-தாக உயர்த்தப்பட்டுள்ளது; முந்தையக் கட்டணம் RM49.90 ஆகும்.
அதே சமயம், Premium திட்டம் 62.90 ரிங்கிட்டிலிருந்து தற்போது RM69.90-ராக உயர்த்தப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், இந்தக் கட்டண உயர்வு, திட்டங்களுக்கு ஏற்ப RM1 முதல் RM7 வரை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 4K Ultra HD வசதி கொண்ட Premium திட்டத்தின் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பயனர்களுக்கு அவர்களின் அடுத்தக் கட்டண அறிக்கையில் இந்த புதியக் கட்டணம் அமுலுக்கு வரும்.
ஆஸ்ட்ரோ போன்ற நிறுவனங்கள் மூலம் நெட்ஃபிலிக்ஸ் இணைப்பைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.
சந்தாதாரர்களுக்கு வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களைத் தடையின்றி வழங்குவதோடு, சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காகவே இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெட்ஃபிலிக்ஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.



