Latestமலேசியா

பெண்களிடையே போதைப்பொருள் பயன்பாடு 3.3 சதவீதம் அதிகரிப்பு

கோத்தா பாரு, செப்-16–நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 8,638 ஆக இருந்த அவ்வெண்ணிக்கை கடந்தாண்டு 3.3 விழுக்காடு அதாவது 8,926 ஆக உயர்ந்தது.

அவ்வெண்ணிக்கையில் மிக அதிகமாக 6,193 பேர் 19 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள். 2,569 பேர் 40 முதல் 59 வயதுடையவர்கள். எஞ்சிய 166 பேர் பதின்ம வயதினர் என தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK-யின் தலைமை இயக்குநர் Datuk Ruslin Jusoh தெரிவித்தார்.

பெண்களிடையே Amphetamine வகை போதைப்பொருள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து opiat, கஞ்சா, மனநலனைப் பாதிக்கும் மாத்திரைகள், ketum, kokain உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஆண்களை விட பெண்கள் போதைப்பொருள் சிகிச்சையைப் பெறுவதில் நிதி, போக்குவரத்து மற்றும் குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம், UNODC தெரிவித்துள்ளதை Ruskin சுட்டிக் காட்டினார்.

பெண்கள் தன்னார்வ சமூக அடிப்படையிலான சிகிச்சையைப் பெறலாம் அல்லது Puspen மறுவாழ்வு மையங்களில் இலவச சிகிச்சையை நாடலாம். கிராமப்புற பெண்களுக்காக AADK-யின் எல்லைகளற்ற மறுவாழ்வு சிகிச்சையாக MRT சேவை வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!