
பாசீர் மாஸ், செப்டம்பர்-20,சுமார் 250 கிலோ எடை கொண்ட 23 வயது இளைஞரின் உடலை நல்லடக்கம் செய்யும் பணியை, கிளந்தான் ரந்தாவ் பாஞ்சாங் மலேசியத் தற்காப்புப் படையினர் (APM) ஏறக்குறைய 5 மணி நேரம் போராடி நிறைவுச் செய்தனர்.
வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சின் அவசர அழைப்பைத் தொடர்ந்து இந்தச் சிறப்பு உதவி வழங்கப்பட்டது.
காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த நடவடிக்கை, பிற்பகல் 3.56 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தது.
இதில் ஓர் அதிகாரி, இரு வீரர்கள் மற்றும் ஒரு லாரி ஈடுபடுத்தப்பட்டன.
குபாங் கெரியானில் உள்ள HPUSM மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்ட அந்த இளைஞரின் உடல், அல்-ஹிடாயா பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்ட பின்னர், கிராம மக்களின் ஒத்துழைப்புடன் Gual Tinggi முஸ்லீம் மையத்துக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



