Latestமலேசியா

மூத்த திரைப்பட இயக்குநர் டான் ஸ்ரீ எல். கிருஷ்ணன் 104 வயதில் காலமானார்

கோலாலம்பூர் – மலாய் சினிமாவின் பொற்காலத்தில் முக்கியப் பங்காற்றிய மூத்த திரைப்பட இயக்குநர் டான் ஸ்ரீ லக்ஷ்மணன் கிருஷ்ணன், தனது 104ஆவது வயதில் காலமானார்.

எல். கிருஷ்ணன் எனப் பரவலாக அறியப்பட்ட அவர், தாய்லாந்தின் சியாங் மாயில் பிற்பகல் 2.15 மணிக்கு, வயது முதிர்வு காரணமான உடல்நலப் பிரச்சினைகளால் உயிரிழந்தார்.

இந்தச் செய்தியை, மறைந்த நடிகர் அசீஸ் சட்டாரின் (Aziz Sattar) மகள் சந்தகியா அஜேஸ் (Sandakiah Azez) பகிர்ந்துள்ளார். அவர், எல். கிருஷ்ணனின் மனைவி புவான் ஸ்ரீ ருக்மணியைத் தொடர்புகொண்டபோது இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மலாய் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் எல். கிருஷ்ணன், அதன் வளர்ச்சியிலும் பொற்காலத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்.

திருமணத்துக்குப் பிறகு மனைவியின் தாய்நாடான தாய்லாந்தில் நீண்டகாலமாக வசித்து வந்ததாக அறியப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!