Latestமலேசியா

“குற்றச்சாட்டுக்குப் பிறகு சொத்து அறிவிப்பா?” – MACC நடவடிக்கையை கேள்வி எழுப்பிய சரவணன்

கோலாலம்பூர், செப்டம்பர்-26 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கவிருப்பதை மனிதவள முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அறிவிப்பு, “இந்த வாரத்திற்கான MACC-யின் KPI அதாவது முதன்மை அடைவுநிலைக் குறியீடு போலும்” என அவர் கிண்டலாகக் கூறினார்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு வரும் திங்கட்கிழமை சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படும் என MACC தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் முன்னதாக தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருக்கும் சரவணனின் மற்றொரு பிள்ளைக்கு நவம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கப்படும்.

சொத்து விவரங்களை அறிவிக்க அவர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றார் அவர்.

ஆனால், சொத்து அறிவிப்பு கோரப்படுவது வழக்கமான நடைமுறை என்பதால் தமக்கு ஆச்சரியம் இல்லை என ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான சரவணன் கூறினார்.

எனினும், தம் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் ஏன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

எது எப்படி இருப்பினும், தமக்கு மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், MACC-யின் கோரிக்கைக்கு முழுமையாக ஒத்துழைத்து அனைத்து சொத்து விவரங்களையும் அறிவிப்பதாகவும் சரவணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!