Latestமலேசியா

காப்பார் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – 3 வாகனங்கள் சேதம்

சிலாங்கூர், செப்டம்பர் 28 – சிலாங்கூர், காப்பாரிலுள்ள Meru Impian குடியிருப்பின் பிளாக் B பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் உட்பட மூன்று வாகனங்கள் தீக்கிரையாகின.

அதிகாலை 5.07 மணியளவில் ஏற்பட்ட தீயில் Proton Exora பல்நோக்கு வாகனம் 80 விழுக்காடும், Toyota Vios கார் 60 விழுக்காடும், Yamaha Avantiz மோட்டார் சைக்கிள் 30 விழுக்காடும் சேதமடைந்தன.

அவசர அழைப்பு கிடைத்த நான்கு நிமிடங்களில், காப்பார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஐந்து வீரர்கள் ஒரு தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீயை 5.50 மணிக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்பு நடவடிக்கை காலை 6.20 மணிக்கு நிறைவடைந்தது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!