Latestமலேசியா

6 நாடுகள், 451 படைப்புகள்; LEGOLAND® பள்ளிச் சவால் 2026-இல் அசத்திய இளம் கட்டுமானக் கலைஞர்கள்!

மலேசியக் கல்வி அமைச்சுடன் இணைந்து நடத்தப்பட்ட ஆசியாவின் மிகப் பெரிய பள்ளிகளுக்கு இடையிலான LEGO® கட்டுமானப் போட்டியான ‘LEGOLAND® பள்ளி சவால் 2026’-இன் ஐந்தாவது பதிப்பில் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

7 முதல் 9 வயது வரைக்குமான ஜூனியர் பிரிவில் சிலாங்கூரைச் சேர்ந்த Cyberjaya தேசிய பள்ளியின் ‘Puteri Mini Makers’ குழுவும், 10 முதல் 12 வயது வரைக்குமான தொடக்கப் பள்ளிப் பிரிவில் கிளாந்தானின் Kubang Kerian 3 தேசிய பள்ளியின் சேர்ந்த ‘The Mavericks’ குழுவும் வெற்றி பெற்றன. 13 முதல் 17 வயது வரைக்குமான உயர்நிலைப் பள்ளிப் பிரிவில் பிலிப்பைன்ஸின் Ateneo de Manila Junior High School-ஐச் சேர்ந்த ‘AJHS BluBLOC’ குழு சாம்பியன் பட்டம் வென்றது.

மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், பிலிப்பின்ஸ், ஹாங் காங், சீனா ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற அப்போட்டியில் 451 படைப்புகளில் இருந்து 15 சிறந்த குழுக்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. ‘The Ultimate Theme Park Ride’ என்ற கருப்பொருளின் கீழ் மாணவர்கள் படைப்பாற்றல், கற்பனைத்திறன், தொழில்நுட்பத் திறன், சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியதாக LEGOLAND Malaysia Resort-இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநர் திலா முனுசாமி தெரிவித்தார்.

இதில் பங்கேற்ற சிலர் தங்களின் மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

LEGO கட்டுமானத்தின் மூலம் மாணவர்கள் STEM மற்றும் STEAM அம்சங்களை ஆராய்வதுடன், தங்கள் யோசனைத் திறனைச் சோதித்து, ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதாக LEGOLAND Malaysia Resort-இன் துணைத் தலைவர் Cs Lim தெரிவித்தார். விளையாட்டின் மூலம் கற்றலை ஊக்குவிப்பதே அப்போட்டியின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

வெற்றியாளர்களுக்கு LEGOLAND Malaysia ஆண்டு பாஸ், LEGO கோப்பை, LEGO செட்கள் மற்றும் சாதனைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிப் பிரிவு வெற்றியாளர்கள் LEGOLAND Shanghai-க்கும், ஜூனியர் பிரிவு வெற்றியாளர்கள் LEGOLAND Malaysia-க்கும் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இறுதிச் சுற்று போட்டியாளர்களின் படைப்புகள் இவ்வாண்டு டிசம்பர் வரை LEGOLAND Malaysia Resort-இன் Miniland பகுதியில் காட்சிக்கு வைக்கப்படும்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!