Latestமலேசியா

KL பொழுதுபோக்கு மையத்தில் ஆண் நடனக் கலைஞர்கள் ‘கூடுதல் சேவைகள்’ வழங்கியதாக சந்தேகம்

புத்ராஜெயா, செப்-29-கோலாலம்பூர், Jalan Klang Lamaவில் உள்ள பொழுதுபோக்கு மையமொன்றில் வேலை செய்து வந்த ஆண் நடனக் கலைஞர்கள், வாடிக்கையாளர்களுக்கு வளாகத்திற்கு வெளியே ‘கூடுதல் சேவைகள்’ வழங்கியிருக்கலாம் என குடிநுழைவுத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அம்மையம் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதோடு அம்மையத்திற்குள் ஆண் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன், ஒரு மேசைக்கு 780 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆண்களின் கவர்ச்சிகரமான நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

இதனிடையே, ‘கூடுதல் சேவைகள்’ தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அவை பின்னர் காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் D7 பிரிவிடம் பகிரப்படும் என்றும் அவர் கூறினார்.

நேற்று முன்தினம் சிறப்பு நடவடிக்கையொன்றில், 21 முதல் 31 வயதுக்குட்பட்ட மூன்று சீன நாட்டவர்களும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவரும் கைது செய்யப்பட்டனர். 1959/63 குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(c)-ன் கீழ் சந்தேகத்தின் பேரில் அவர்கள் 14 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!