Latestமலேசியா

வாட்ஸ்அப் கணக்கு விவகாரம்: Metaவிடம் விளக்கம் கோரும் MCMC

கோலாலம்பூர், அக்-1- மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, முடக்கப்பட்டது, நுழைய அனுமதி மறுக்கப்பட்டது அல்லது அங்கீகாரம் இன்றி கணக்குகள் பயன்படுத்தப்பட்டது போன்ற சிக்கல்களுக்கு உள்ளான WhatsApp கணக்குகள் குறித்து, Meta நிறுவனத்திடம் விரிவான விளக்கம் கோரியுள்ளது.

அவ்விவகாரம் தொடர்பில் இதுவரை 92 புகார்கள் கிடைத்துள்ளன. செப்டம்பர் 25 ஆம் தேதி Metaவிடம் முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், செப்டம்பர் 28 ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக MCMC தெரிவித்தது.

அவ்விவகாரத்துக்கு பதிலளிக்க Meta, அக்டோபர் 2 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரியுள்ளது. பாதிக்கப்பட்ட கணக்குகள் குறித்து விரிவான விளக்கமும் உடனடித் தீர்வும் வழங்குமாறு MCMC, Metaவை வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, WhatsApp கணக்குகள் ஊடுருவப்படுதல் மற்றும் முடக்கப்படுதல் தொடர்பாக Metaவின் பதில் குறித்து விளக்க அறிக்கை வெளியிடுமாறு MCMC-க்கு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தொடர்புத் துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil இதற்கு முன் தெரிவித்திருந்தார்.

கணக்குகள் ஊடுருவப்படுவதும் முடக்கப்படுவதும் வெவ்வேறு விவகாரங்கள். ஊடுருவப்பட்ட கணக்குகள் மோசடி, தேவையற்ற செய்திகள் அல்லது சேவை விதிமுறை மீறல்களுக்கு பயன்படுத்தப்பட்டால், அவை பின்னர் WhatsApp தளத்தால் முடக்கப்படக்கூடும் என MCMC ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!