Latestமலேசியா

புகைமூட்டம்: 6 மாநிலங்களிலும் கோலாலம்பூரிலும் தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டங்கள் ஒத்திவைப்பு

கோலாலம்பூர், அக்-09- புகைமூட்டம் காரணமாக சிலாங்கூர், ஜோகூர், கெடா, பினாங்கு, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய ஆறு மாநிலங்களிலும் கோலாலம்பூரிலும் நாளை நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Bukit Jalil தேசிய அரங்கில் நடைபெறவிருந்த தேசிய அளவிலான கொண்டாட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக காற்றின் தரம் பாதுகாப்பான நிலைக்குத் திரும்பிய பின் புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரம், பங்கேற்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்தாலோசித்த பின்னரே அம்முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு கூறியது. காற்றின் தரம் மற்றும் புகைமூட்ட நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது.

இதனிடையே, பகாங், திரங்கானு, கிளந்தான், பெர்லிஸ், பேராக், சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 37 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியிருந்தது. 31 பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருந்தது. எந்த பகுதியிலும் API நல்ல நிலையில் இல்லை. மிகவும் ஆரோக்கியமற்ற அல்லது ஆபத்தான நிலை எங்கும் பதிவாகவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!