Latestமலேசியா

பெட்டாலிங் ஜெயாவில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் கைது

பெட்டாலிங் ஜெயா, அக்,16-சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் அரசு சாரா அமைப்பின் நிறுவனர் என நம்பப்படும் பெண்ணுடன் மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதான அரசியல் கட்சியின் மூத்த தலைவருமான அவரை சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையான JAIS நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்தது. சம்பந்தப்பட்ட இருவரும் ஆவணப்ப பதிவு நடவடிக்கைகளுக்காக ஷா ஆலாமில் உள்ள JAIS அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதனை உறுதிப்படுத்திய JAIS இயக்குநர் Datuk Muhamad Shazihan Ahmad, 1995ஆம் ஆண்டு சிலாங்கூர் ஷரியா குற்றவியல் சட்டத்தின் பிரிவு 29-இன் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3,000 ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இவ்வேளையில், சம்பவம் தொடர்பாக ஊகங்கள் மற்றும் அவதூறுகளைப் பரப்பி சம்பந்தப்பட்டவர்களை சிறுமைப்படுத்த வேண்டாம் என JAIS முஸ்லீம்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!