Latestமலேசியா

2026-ல் போதைப்பொருள் துஷ்பிரயோகம் அதிகம் பதிவான மாநிலம் திரங்கானு

கோலாலம்பூர், அக்டோபர்-21,நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள மாநிலமாகத் திரங்கானு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாண்டு திரங்கானுவில் ஒவ்வொரு ஒரு லட்சம் மக்களுக்கும் 735 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் AADK தெரிவித்தது.

திரங்கானுவுக்கு அடுத்து கிளந்தானில் 694, கெடாவில் 669 மற்றும் பெர்லிஸில் 646 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் வரையிலான புள்ளிவிவரங்களின் படி, நாடு முழுவதும் 130,307 போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் தவறான பயன்பாடு தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எல்லைத் தாண்டிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளும் புவியியல் அமைப்பும் இந்த 4 மாநிலங்களில் நிலைமை மோசமடைவதற்கான காரணங்களில் அடங்கும் என AADK குறிப்பிட்டது.

இதனிடையே, அக்டோபர் 18-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 4,200-க்கும் மேற்பட்ட அமுலாக்க நடவடிக்கைகளில், 30,157 பேர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தாங்களாகவே முன்வந்து சிகிச்சை பெறுவோரின் மாதாந்திர சராசரி எண்ணிக்கை, கடந்தாண்டு 75-தாக இருந்த நிலையில், இவ்வாண்டு 232-ராக அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி அமுலுக்கு வந்த போதைப்பொருள் சார்ந்திருப்போர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுச் சட்டத் திருத்தமே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என AADK கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!