
கோலாலம்பூர், அக்டோபர்-21,கோயில்களைச் சேதப்படுத்துவோருக்கு நேரடி சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான நாசவேலைகளைத் தடுக்க, கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என, பத்து எம்.பி P. பிரபாகரன் தெரிவித்தார்.
அண்மையில் NPE நெடுஞ்சாலை அருகேயுள்ள கோயிலொன்றில் தெய்வச் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
கோயில்களைச் சேதப்படுத்தும் நபர்களுக்கு வெறும் அபராதம் மட்டுமே போதாது; மாறாக, அவர்களை நேரடியாகச் சிறைக்கு அனுப்பும் வகையில் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே, 2027 பட்ஜெட் விவாதத்தில் பிரபாகரன் முன்வைத்தக் கோரிக்கையாகும்.
வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பையும், மத நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.



