
கிள்ளான், அக்டோபர்-22,சிலாங்கூர், கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில், மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில், மருத்துவமனையின் அவசர மற்றும் விபத்துப் பிரிவின் நீல மண்டலத்திற்கு முன்னால் உள்ள நடைபாதையில் நிகழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் நோயாளிகள் அல்லது மருத்துவமனை ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முதற்கட்ட விசாரணையில், மேற்கூரையில் இருந்த குழாயில் ஏற்பட்ட நீர்க்கசிவு காரணமாக அதன் கட்டமைப்பு வலுவிழந்து இடிந்து விழுந்ததாக சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதி உடனடியாக மூடப்பட்டு, மாற்று நடைபாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 2.30 மணிக்கு நடைபாதை மீண்டும் திறக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம்போல் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



