Latestமலேசியா

மலேசியாவில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியிடங்கள் காலி

கோலாலம்பூர், அக்டோபர்-22,சுகாதார அமைச்சில், ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, 13 ஆயிரத்து 72 மருத்துவர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அவற்றில் ஆயிரத்து 660 சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கான பணியிடங்களும், 11 ஆயிரத்து 412 பொது மருத்துவர்களுக்கான பணியிடங்களும் அடங்கும்.

2024 முதல் 2026-ஆம் ஆண்டு வரையில், 3 ஆயிரத்து 510 மருத்துவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

அவர்களில் 51.4 விழுக்காட்டினர் தனியார் மருத்துவத் துறைக்குச் சென்றுள்ள நிலையில், 36.8 விழுக்காட்டினர் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகியுள்ளனர்.

மேலும், 2.9 விழுக்காட்டினர் வெளிநாடுகளில் பணிபுரிய அல்லது குடியேறச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க, இவ்வாண்டு 4 ஆயிரத்து 500 ஒப்பந்த மருத்துவர்களுக்கு நிரந்தரப் பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மற்றொரு நிலவரத்தில், 6 அரசாங்க மருத்துவமனைகளில் அவசரமற்ற நோயாளிகளில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இரண்டு மணி நேரத்திற்குள் சிகிச்சைப் பெறும் இலக்கு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் Dr சுல்கிஃப்ளி இந்த விவரங்களை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!