Latestமலேசியா

700,000 ரிங்கிட் மோசடி: சிலாங்கூர் ராஜா மூடாவின் மெய்க்காப்பாளராகக் காட்டிக் கொண்ட நபர் தேடப்படுகிறார்

ஷா ஆலாம், அக்-23-சிலாங்கூர் ராஜா மூடாவின் மெய்க்காப்பாளர் என ஆள்மாறாட்டம் செய்து, 700,000 ரிங்கிட் மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 40 வயது ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர் மீது 19 புகார்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஒன்பது சிலாங்கூரில் பதிவானவை. அவர் தற்போது தேடப்படும் நபர்களின் பட்டியலில் இருப்பதாக மாநிலக் காவல்துறைத் தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார்.

அச்சந்தேக நபர் அரச அரண்மனை ஊழியர் அல்ல. சிலாங்கூர் அரச அரண்மனையுடன் அவருக்குத் தொடர்பில்லை. சொத்து மற்றும் வாகனப் பரிவர்த்தனைகளில் மக்களை ஏமாற்றுவதற்காக ராஜா மூடாவின் புகைப்படங்களை அவர் பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுவதாக Shazeli கூறினார்.

அம்மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும், அவருடைய வருங்கால மனைவி எனக் கூறப்படும் 30 வயது உள்ளூர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 15ஆம் தேதி, Istana Mestikaவில் உள்ள சிலாங்கூர் சுல்தானின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அலுவலகம் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது.

அவ்விவகாரத்தைத் தீவிரமாகக் கருதுவதாக சிலாங்கூர் அரண்மனை குறிப்பிட்டுள்ளது. ஆள்மாறாட்டம் தொடர்பாக முழுமையான, நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்துமாறு அது காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!