Latestமலேசியா

திரங்கானுவில் தேன் சேகரிக்கும் போது தேனீக்கள் கொட்டியதில் MARDI ஊழியர் பரிதாப மரணம்

சுக்காய், அக்டோபர்-26,திரங்கானுவில் MARDI எனப்படும் விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் பண்ணை ஒன்றில் தேன் சேகரிக்க முயன்றபோது, தேனீக்கள் கொட்டியதில் பொது ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Ayer Putih-வில் உள்ள MARDI கிளையில் சனிக்கிழமை காலை 9.50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கெமாமான் போலீஸ் கூறியது.

40 வயதான Hafizul Mat என்ற அந்த ஊழியர், சக ஊழியரின் எச்சரிக்கையை மீறி மரத்தில் ஏறி தேன் சேகரிக்க முயன்றபோது தேனீக் கூட்டம் அவரை முற்றுகையிட்டது.

தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அவர் அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் குதித்தபோதிலும், கடுமையான வலியால் அவதிப்பட்டு பின்னர் மயங்கி விழுந்தார்.

​உடனடியாக மீட்கப்பட்டு கெமாமான் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டவர், அங்குச் சிகிச்சை பலனின்றி மாலை 6.50 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!