
கோலாலாம்பூர், அக்டோபர்-28,பிரசவத்திற்குப் பிறகு தாய் மற்றும் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதில் தம்பதியருக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும் வகையில், தாய்மை விடுப்பைக் கணவன் மற்றும் மனைவி இருவரும் பகிர்ந்து கொள்வதற்கான பரிந்துரையை பரிசீலிக்கத் தயார் என, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில், 2027 பட்ஜெட் விவாதத்தின் போது அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரொட்ஸியா இஸ்மாயில் முன்னதாக இந்த யோசனையை முன்வைத்தார்.
பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது, கணவனும் மனைவியும் மாறி மாறி குழந்தையைப் பராமரிக்க விடுப்பைப் பகிர்ந்து கொள்ளும் முறை பெரிதும் உதவும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் நேன்ஸி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் இத்தகைய நல்ல முன்மொழிவுகள் விரிவாக ஆராயப்படும் என்றார்.
தற்போது தொழிலாளர் சட்டத்தின் கீழ் பெண் ஊழியர்களுக்கு 98 நாட்கள் பிரசவ விடுப்பும், தந்தைமார்களுக்கு 7 நாட்கள் பிாிவு விடுப்பும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், இளம் பெற்றோர் தங்கள் குழந்தை வளர்ப்பின் ஆரம்பக் கட்டத்தைச் சீராகக் கையாள புதிய வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



