
கோலாலம்பூர், நவம்பர்-1,வெளிநாட்டவர்களைக் குறிவைத்து, இங்கிருந்து செயல்பட்டு வந்த அனைத்துலக மோசடி அழைப்பு மையத்தைப் போலீஸார் முறியடித்துள்ளனர்.
கோலாலம்பூரில் வியாழக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட தைவான் நாட்டைச் சேர்ந்த 18 பேர் கைதாகினர்.
கைதுச் செய்யப்பட்டவர்கள், ஹோங் கோங் போலீஸ்காரர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து, அந்நாட்டவர்களைக் குறிவைத்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 69 கைப்பேசிகள், 5 மடிக்கணினிகள், 2 ஜோடி ஹோங் கோங் போலீஸ் சீருடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அனைவரும் மேல் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



