
கோலாலம்பூர், நவம்பர்-2,பின்தங்கிய நிலையில் உள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், Amalan Setar நிறுவனம், MySkills அறக்கட்டளைக்கு 7.2 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.
கோலாலம்பூரில் நடைபெற்ற இந்நிகழ்வில் Alam Setar நிர்வாக இயக்குநர் R. ராஜேந்திரன், MySkills அறக்கட்டளையின் தலைமை செயலதிகாரி G. தேவஷர்மா, அதன் இணை நிறுவனர் S.பசுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய மற்றும் ஆபத்தான சூழலில் உள்ள இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி, தனிமனித மேம்பாடு ஆகியவற்றின் மூலம் புதிய வாய்ப்புகளை வழங்குவது இந்த நிதியுதவியின் நோக்கமாகும்.
எதிர்மறையான சூழலிலிருந்து இளைஞர்களை மீட்டு, அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதே MySkills அறக்கட்டளையின் சிறப்பம்சம் என Amalan Setar நிறுவனத்தின் ராஜேந்திரன் கூறினார்.
இந்த நிதியுதவியின் மூலம், அறக்கட்டளையின் நிதி இருப்பு 15 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் 20 மில்லியன் ரிங்கிட் இலக்கை எட்ட மேலும் 5 மில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது.
2010-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த MySkills அறக்கட்டளை, தற்போது கலும்பாங் campus வளாகத்தில் ஆண்டுதோறும் 150 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.
ஜோகூர், பினாங்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கும் தனது சேவைகளை விரிவுபடுத்த அது திட்டமிட்டுள்ளது.
பின்தங்கிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதிலும் நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது என அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.



