Latestஅமெரிக்காஉலகம்

அமெரிக்கா புளோரிடாவில் தனியார் ஜெட் விமானம் விழுந்து 9 பேர் பலி

புளோரிடா, நவம்பர் 2 – அமெரிக்காவின் புளோரிடா தெற்குப் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் தனியார் ஜெட் விமானம் விழுந்து வெடித்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.

லியர்ஜெட் 60 (Learjet 60) ரக விமானம், டெக்சாஸ் (Texas) மாநிலம் ஆஸ்டினிலிருந்து (Austin) பஹாமாஸுக்குச் (Bahamas) சென்று கொண்டிருந்தபோது, சுமார் 2,400 மீட்டர் உயரத்திலிருந்து திடீரென கீழே விழுந்து குடியிருப்புப் பகுதியில் மோதியது.

நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், விமானம் தீப்பற்றி வெடித்ததுடன் அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளும் சேதமடைந்தன. வெடிப்புச் சத்தம் ஏவுகணை வெடித்ததைப் போன்று இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதனைப் பெரும் உயிரிழப்பு விபத்தாக மீட்புப் படையினர் வகைப்படுத்தியுள்ளனர். விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் தரையில் இருந்த பொதுமக்களின் உயிரிழப்பு, காயங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதையடுத்து, விசாரணை மற்றும் மீட்புப் பணிகளுக்காக கிரீன்ஏக்கர்ஸ் (Greenacres) பகுதியைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!