Latestமலேசியா

விசாரணையின் அடிப்படையிலேயே ஷுஹைலி மீது நடவடிக்கை – பிரதமர்

கோலாலம்பூர், நவம்பர் 3 – அரசு அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள், பதவி மாற்றம் உள்ளிட்டவை சட்ட நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் (AKPS) தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸைன் (Mohd Shuhaily Mohd Zain), மீண்டும் மலேசியக் காவல்துறைக்கு (PDRM) மாற்றப்பட்ட விவகாரம் குறித்து கருத்துரைத்த அவர், இந்த நடவடிக்கை விசாரணையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

அந்த அதிகாரி முன்பு சிறப்பாகப் பணியாற்றியிருந்தாலும், அவர் மீது தவறான நடத்தை தொடர்பான புகார்கள் இருந்தால், சட்டப்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் கொண்டுசெல்ல வேண்டுமா என்பதை சட்டத்துறைத் தலைவர் அலுவலகமே (AGC) முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சோ விசாரணையில் தலையிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) இரண்டு காவல்துறை அதிகாரிகளைக் காயப்படுத்தியதாக ஷுஹைலி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும், அவர் அவ்விரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து, விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!