Latestமலேசியா

பஹாங்கில் மரம் சரிந்து கார் மீது விழுந்த சம்பவம்; உயிர்ச்சேதம் ஏதுமில்லை

பஹாங், நவம்பர் 5 – பஹாங் ஜெரந்துட்டிலுள்ள புலாவ் தாவார் சமய இடைநிலை பள்ளிகருகே (SMK Agama Pulau Tawar) இன்று மாலை மரம் சரிந்து கார் மீது விழுந்ததில் 52 வயது ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மாலை சுமார் 4 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், காருக்குள் சிக்கிய ஓட்டுநரை அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வருவதற்கு முன்பே மீட்டனர்.

மாலை 4.18 மணிக்கு அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து ஜெரந்துட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் ஓட்டுநருக்கு கழுத்துப் பாதுகாப்புக் கருவியைப் பொருத்திய பின்னர் மருத்துவ உதவி மற்றும் மேல் சிகிச்சைக்காக அவரை மலேசிய குடிமைத் தற்காப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே, சாலையில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரத்தை இயந்திர ரம்பம் மூலம் வெட்டி அகற்றியதுடன், போலீசார் மற்றும் குடிமைத் தற்காப்புப் படையினருடன் இணைந்து சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!