Latestமலேசியா

பினாங்கு பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை; நால்வர் தாக்கியதில் ஆடவர் காயம்

புக்கிட் மெர்தாஜாம், நவம்பர் 12 – பினாங்கு, பெர்மாத்தாங் பாவ் (Permatang Pauh), ஜாலான் சமகாகா (Jalan Samagagah) பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் நால்வர் நடத்திய கொள்ளையில் 43 வயது ஆடவர் காயமடைந்தார்.

நவம்பர் 10ஆம் தேதி காலை 11.30 மணியளவில், மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கூர்மையான உலோகப் பொருட்களால் அவரைத் தாக்கி, சுமார் 10,000 ரிங்கிட் மதிப்புள்ள உடைமைகளைக் கொள்ளையடித்துத் தப்பினர்.

பொதுமக்களிடம் நன்கொடை கேட்பது போல் அணுகி கொள்ளையில் ஈடுபடுவதே அவர்களின் வழிமுறை என செபராங் பிறை தெங்கா மாவட்டக் காவல்துறைத் தலைவர் நிக் அமினுடின் ராஜா அப்துல்லா (Nik Aminuddin Raja Abdullah) தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்புகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!