
கோலாலம்பூர், நவம்பர் 13 – அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தோனேசிய ரூபியாவின் மதிப்பு, கடந்த வியாழக்கிழமை வரலாறு காணாத அளவுக்குச் சரிந்தது.
அமெரிக்க மத்திய வங்கி (Fed) அடுத்த ஆண்டிலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பால், முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரை நோக்கித் திரும்பியதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
ஆசியாவில் இந்த ஆண்டின் மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக விளங்கும் ரூபியா, ஒரு அமெரிக்க டாலருக்கு 18,253 ரூபியா என்ற நிலைக்குச் சரிந்தது.
இதையடுத்து, ரூபியாவின் மதிப்பை நிலைநிறுத்தும் நோக்கில் இந்தோனேசிய மத்திய வங்கி சந்தையில் தலையிட்டது.
இதற்கிடையில், பொருளாதார நிலை, ஊழல் மற்றும் காட்டுத்தீ தொடர்பான அதிருப்திகளால் அரசாங்கம் ஏற்கெனவே அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், துணை அதிபரின் பதவி விலகலும் அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.



