Latestவிளையாட்டு

கால்பந்து வீரர் உயிரிழப்பு; கோல் காவலருக்கு 12 ஆட்டங்கள் தடை

மெட்ரிட், நவம்பர்-14 – ஸ்பெயினில் கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட மோதலில் எதிரணி வீரர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோல்காப்பாளர் Jesus Owono-வுக்கு 12 ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2-ஆம் தேதி, ஸ்பெயினின் இரண்டாம் நிலை கால்பந்து லீக்கில், FC Andorra மற்றும் Tenerife அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பந்தைத் தடுக்க முயன்ற Andorra அணியின் கோல்காவலர் Owono, எதிரணி வீரரான 30 வயது Jesus di Miguel-லுடன் பலமாக மோதினார்.

இதில் படுகாயமடைந்த de Miguel, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மறுநாள் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தை விசாரித்த ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, Owono அளவுக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்தியதாகக் கண்டறிந்தது.

இதையடுத்து, விதிமுறைகளின்படி அதிகபட்ச தண்டனையாக அவருக்கு 12 ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு Owono தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்பெயின் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!