Latestமலேசியா

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: துவாங்கு முஹ்ரிஸுக்கு மீண்டும் ஆதரவு தெரிவிக்கும் மந்திரி பெசார்

சிரம்பான், நவம்பர்-14 – நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், மாநில சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிருக்கு மீண்டும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் மாநில அரசியல் சாசன நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

துவாங்கு முஹ்ரிஸின் பதவிக்கு எதிராக முன்னதாகத் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை மீட்டுக்கொள்ளும் கடிதத்தை, இஸ்மாயில் லாசிம் மலாய் ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளரிடம் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக துவாங்கு முஹ்ரிஸால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இந்த முடிவை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, நவம்பர் 26-ஆம் தேதி மாநிலச் சட்டமன்றத்தைக் கூட்டவும், மறுநாள் 2027-ஆம் ஆண்டுக்கான மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

என்றாலும், சட்டமன்றக் கூட்டத்தை நடத்த துவாங்கு முஹ்ரிஸின் ஒப்புதல் அவசியமாகும்.

எது எப்படி இருப்பினும், இந்தப் புதிய முன்னேற்றம் மாநிலத்தில் நீடிக்கும் அரசமைப்பு நெருக்கடிக்குத் தீர்வு காண வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!