Latestமலேசியா

தனிநபர் கடன் பெற போலி ஆவணங்களையும் தகவல்களையும் பயன்படுத்திய கூட்டுறவுச் சங்க நிர்வாகிக்கு 30,000 ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனை

ஜோகூர் பாரு, நவ.17-தனிநபர் கடன் பெறுவதற்காகப் போலி ஆவணங்களையும் தவறான தகவல்களையும் பயன்படுத்திய கூட்டுறவுச் சங்க நிர்வாகி ஒருவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என ஜோகூர் பாரு sesyen நீதிமன்றம் உத்தரவிட்டது.

39 வயதான Ku Siti Zulaikha Mohamed Zakkariya, கடந்த நவம்பர் 3ஆம் தேதி தமக்கு எதிரான மாற்றுக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். தனிநபர் கடன் விண்ணப்பத்திற்காகத் தவறான விவரங்களைக் கொண்ட ஆவணங்களைப் பயன்படுத்தி Ibrahim Ali எனும் 61 வயது நபரை ஏமாற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2022 செப்டம்பரில் KOOPJB நிர்வாகியாப் பணியாற்றிய Ku Siti Zulaikha, 56,000 ரிங்கிட் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவர் பெறத் தகுதியான கடன் தொகை 33,938.22 மட்டுமே. கடன் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக, தனது உதவியாளரிடம் கடன் அறிக்கையில் உள்ள சில விவரங்களை மாற்றியமைக்கக் கேட்டுள்ளார். மாற்றப்பட்ட அறிக்கையைப் பார்த்த KOOPJB தலைவரான Ibrahim, மற்ற நிதி விவரங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை அறியாமல் கடன் விண்ணப்பத்தை அங்கீகரித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தண்டனையைக் குறைக்குமாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் கோரியபோதும், பொதுமக்களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையில் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து நீதிபதி என். கனகேஸ்வரி அபராதத்தை அறிவித்ததுடன் அத்தொகையைச் செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனத் தீர்ப்பளித்தார். அதோடு செலுத்தப்பட்ட 10,000 ரிங்கிட் பிணைத் தொகையைத் திருப்பித் தரவும் உத்தரவிடப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!