Latestமலேசியா

கூட்டரசு நெடுஞ்சாலை விபத்து: காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு இரு பெண்கள் பலி; தப்பியோடிய ஓட்டுநரைத் தேடும் போலீஸ்

கோலாலம்பூர், நவம்பர்-22 – கூட்டரசு நெடுஞ்சாலையில் கோலாலம்பூர் நோக்கிச் சென்ற Mercedes-Benz கார் சறுக்கி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

​நேற்று காலை 7 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகப் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர்
Shamsudin Mamat தெரிவித்தார்.

அந்தத் ​தங்க நிற Benz கார் கட்டுப்பாட்டை இழந்து மேடான பகுதியில் மோதிச் சுழன்றதில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 20 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு உள்ளூர் பெண்களும் பின்பக்கக் கண்ணாடி வழியாகத் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

​காரை ஓட்டிச் சென்ற 20 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.

அவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!