Latestமலேசியா

கிளாந்தானில் போலிஸாரிடமிருந்து தப்பிய மைவி கார் விபத்து; 8 மியன்மார் நாட்டவர்கள் கைது!

தும்பாட், நவ. 23 – மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 9 மாதப் பெண் குழந்தை உட்பட 8 மியன்மார் நாட்டவர்கள், பெரோடுவா மைவி காரில் நெரிசலாகப் பயணம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

தும்பாட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் முகமட் கைரி ஷாஃபி (Mohd Khairi Shafie) கூறுகையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் கிளாந்தான் கம்போங் நேத்திங், பெங்காலான் கூபோர் (Kampung Neting, Pengkalan Kubor) பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த PGA 7 படையினர் சந்தேகத்திற்கிடமான மைவி காரைத் தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால், ஓட்டுநர் தப்பிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, 34 வயதுடைய உள்ளூர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், 18 முதல் 31 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் 9 மாதப் பெண் குழந்தை என மொத்தம் 8 மியன்மார் நாட்டவர்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை.

இச்சம்பவம் தொடர்பாக ஆட்கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இதில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!