
சுங்கை பூலோ, ஜனவரி-18-மலேசியா முழுவதும் AI திறன்களை மேம்படுத்தும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
TalentCorp மற்றும் Ernst & Young Consulting இணைந்து நடத்தும் ‘Jelajah AI MyMahir’ திட்டம், 110 மில்லியன் ரிங்கிட் மதிப்பில், 22,000க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு இலவச பயிற்சியை வழங்குவதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.
மாணவர்கள், பெண்கள், முன்னாள் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்கள் இதில் பயன் பெறுகின்றனர்.
ஒரு மாணவருக்கான பயிற்சி 5,000 ரிங்கிட் மதிப்புடையது; ஆனால் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில் 12,000 பேர் நேரடியாக Jelajah AI MyMahir வழியாக பயிற்சி பெற, மேலும் 10,000 பேர் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சிறப்பு திட்டங்கள் மூலம் பயன் பெறவுள்ளனர்.
கடந்தாண்டு தொடங்கிய இத்திட்டத்தில் 1,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இம்முயற்சி தொழில்நுட்பத்தை மட்டுமல்ல, மலேசியர்களை டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வலுப்படுத்துவதே நோக்கம் என, சுங்கை பூலோவில் நேற்று அத்திட்டத்தை அறிமுகப்படுத்திய போது ரமணன் தெரிவித்தார்.



