Latestமலேசியா

AI குரல் மோசடி; ரொக்கப் போட்டி எதனையும் நான் நடத்தவில்லை- சித்தி நூர்ஹலிசா விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை-15, AI அதி நிவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது குரல் நகல் செய்யப்பட்டு பொது மக்கள் மோசடிக்கு ஆளாகி வருவதை நாட்டின் முதல் நிலை பாடகி டத்தோ ஸ்ரீ சித்தி நூர்ஹலிசா அம்பலப்படுத்தியுள்ளார்.

அதுவும் ரொக்கப் பரிசு தருவதாக தனது குரலை மாற்றி அவர்கள் அச்செயலில் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.

மக்களுக்கு ரொக்கப் பணம் தரும் எந்தவொரு போட்டியையும் தான் ஏற்பாடு செய்யவில்லை என்றார் அவர்.

எனவே, அவ்வாறுக் கூறிக் கொண்டு குறுந்தகவல் அல்லது வீடியோ அழைப்பு வந்தால் அது கண்டிப்பாக நானல்ல.

அது ஒரு மோசடி; தயவு செய்து நம்பி ஏமாந்து விடாதீர்கள் என, பொது மக்களை சித்தி கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக வயதானவர்களைக் குறி வைத்தே அம்மோசடி அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே வீட்டிலுள்ள பெரியவர்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் அது குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லி வையுங்கள் என சித்தி கேட்டுக் கொண்டார்.

பொறுப்பற்ற தரப்பினரால் சமூக ஊடகங்களில் சித்தி நூர்ஹலிசாவின் பெயரும் புகைப்படங்களும் தவறாகப் பயன்படுத்தப்படுவது நீண்ட காலமாகவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது AI குரல் மோசடி என அடுத்தக் கட்டத்திற்கு அது சென்றிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!