
கோலாலம்பூர், அக்-29-எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS தலைமை இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain, அரச மலேசிய காவல்படைக்குத் திரும்புவதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்திருக்கிறார்.
அம்முடிவு கடந்த வாரமே எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், AKPS-க்கு பணிமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியான Mohd Shuhaily, PDRM-க்குத் திரும்புவார் என்றார். அவ்விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளும் என்றும் Saifuddin கூறினார்.
இன்று உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், AKPS தலைமை இயக்குநர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்விக்கும் பதிலளித்தார். காவல்துறை அதிகாரிகளில் ஒருவரே அப்பதவிக்கு நியமிக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.
AKPS தலைமை இயக்குநர் பதவியின் தற்போதைய நிலை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட ஆலோசனையைப் பெற, PDRM அவ்விவகாரத்தை தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் (AGC) கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
Mohd Shuhailyயின் பணிக் காலத்தைக் குறைப்பது அல்லது அவரது ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதல் தேவைப்படும் என தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Mohd Khalid Ismail கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



