Latestமலேசியா

சர்வதேச ஒத்துழைப்பை ஆராய்கிறது நீலப் பொருளாதாரக் கூட்டுறவு

கோலாலம்பூர், அக்- 29 — கடல் மற்றும் கடலோர வளங்களின் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்ந்து, அவற்றின் பலன்கள் உள்ளூர் மக்களையும் சென்றடைவதை உறுதிசெய்யும் நோக்கில், நீலப் பொருளாதாரக் கூட்டுறவு சர்வதேச ஒத்துழைப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

கோலாலம்பூரில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற கூட்டுறவின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்துக்கு அதன் தலைவர் டாக்டர் ரகுராமன் குருசாமி தலைமை தாங்கினார்.

கூட்டுறவின் ஆலோசகரும், சீஷெல்ஸ் (Seychelles) குடியரசுத் தலைவரின் தூதருமான டாக்டர் நிகோ பரிட்டோ, கூட்டத்துக்கு வழிகாட்டினார்.

சீஷெல்ஸில் உள்ள புளூ இன்ஸ்டிடியூட் மற்றும் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்துடன் முறையான ஒத்துழைப்பை ஆராய நிர்வாகக் குழு இணக்கம் தெரிவித்தது. இந்த ஒத்துழைப்பு, ஆராய்ச்சி, கல்வி, புத்தாக்கம், திறன் மேம்பாடு மற்றும் வளங்களை நிலையான முறையில் நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.

சர்வதேச நிபுணத்துவத்தையும் உள்ளூர் பொருளாதார வாய்ப்புகளையும் ஒருங்கிணைத்து, சமூகங்களுக்கு நன்மை பயக்கும் முன்முயற்சிகளை உருவாக்கவும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் கூட்டுறவு எதிர்பார்க்கிறது.

டாக்டர் ரகுராமன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களால் கடந்த ஜூலை 22ஆம் தேதி கூட்டுறவை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 11ஆம் தேதி கூட்டுறவு பதிவு செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!