Latestமலேசியா

BDS மலேசியாவிற்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டுள்ளது McDonald’s நிறுவனம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22 – BDS மலேசியா எனும் புறக்கணிப்பை ஊக்குவிக்கும் இயக்கத்திற்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை, McDonald’s நிறுவனம் மீட்டுக் கொண்டுள்ளது.

இரு தரப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையின் வாயிலாக அம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

மலேசிய McDonald’s நிறுவனம், இஸ்ரேலில் உள்ள McDonald’s நிறுவனத்திடமிருந்து முழுமையாக விடுபட்டது, தனிச்சையாக செயல்படுகிறது என்பதை BDS கண்டறிந்ததை அடுத்து, அந்த பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

எந்த ஒரு மோதலையும், போரையும் ஆதரிப்பதில்லை எனும் நிலைப்பாட்டில் மலேசிய McDonald’s நிறுவனம் உறுதியாக உள்ளது.

காசா முனையில் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு, மலேசிய McDonald’s நிறுவனம் தொடர்ந்து ஆதரவளிக்கும்.

அதற்காக நிவாரண நிதியுதவியும் தொடர்ந்து வழங்கப்படுமென, McDonald’s நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக, இஸ்ரேஸ் கூட்டு நிறுவனமான McDonald’s-சை புறக்கணிக்குமாறு BDS அழைப்பு விடுத்ததை அடுத்து, அந்த இயக்கத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!