Latestமலேசியா

BUDI95 மாதாந்திர ஒதுக்கீடு 200 லிட்டராகவே தொடரும்; தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து நிதி அமைச்சு விளக்கம்

புத்ராஜெயா, ஜுன்-1 – BUDI95 மானியத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனர்களுக்கான மாதாந்திர ஒதுக்கீடு, 150 லிட்டராகக் குறைக்கப்பட்டதாக வெளியான தகவலை நிதி அமைச்சு மறுத்துள்ளது.

மாதாந்திர ஒதுக்கீடு தொடர்ந்து 200 லிட்டராகவே நீடிக்கும் என MoF இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

​நேற்றிரவு 11 மணியளவில் கணினியில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணியின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, சில பயனர்களுக்கு 150 லிட்டர் எனத் தவறாகக் காட்டியுள்ளது.

தற்போது அந்தப் பிழை முழுமையாகச் சரிசெய்யப்பட்டுவிட்டது.

​நடப்பு ஜூன் மாதத்திற்கும் பயனர்களுக்கு 200 லிட்டர் ஒதுக்கீடு தங்கு தடையின்றி வழங்கப்படும்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் மானியம் தகுதியானவர்களைச் சென்றடைவதை அரசாங்கம் தொடர்ந்து உறுதிச் செய்யும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!