Latestமலேசியா

Bukit Minyak துப்பாக்கிச் சூட்டுக் கொலை: சம்பவத்திற்கு முன் தகராறு ஏற்பட்டதாகச் சக ஊழியர் வாக்குமூலம்

புக்கிட் மெர்தாஜாம், நவம்பர்-15,பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், Bukit Minyak-கில் உள்ள தொழிற்சாலை டீசல் சேமிப்புக் கிடங்கில் ஆடவர் ஒருவர் சக ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறால் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், ‘ஆ சுவான்’ என அழைக்கப்படும் 41 வயது நபர் உடலிலும் காலிலும் மும்முறை சுடப்பட்டு உயிரிழந்தார்.

சம்பவத்திற்கு முன்னதாக, 40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் தனக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகத் தெரிவித்ததாகவும், பிரச்சனையைத் தவிர்க்க உடனடியாக வீட்டுக்குச் செல்லுமாறு தான் அறிவுறுத்தியதாகவும் சக ஊழியர் ஒருவர் போலீஸ் விசாரணையில் சாட்சியமளித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், குற்றவியல் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவுச் செய்துள்ள போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அங்குப் பணியாற்றி வந்த நபர் சக ஊழியராலேயே சுட்டுக் கொல்லப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!