Latestமலேசியா

DLP விவகாரத்தில் அரசியல் வேண்டாம்; புதிய உத்தரவைத் திரும்பப் பெறுவீர் – உரிமை கட்சி வலியுறுத்து

பினாங்கு, ஜூன்-9 – பினாங்கில் உள்ள தேசிய மற்றும் தாய்மொழிப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒரு டிஎல்பி வகுப்பையாவது தேசிய மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்.

மலேசிய ஐக்கிய உரிமை கட்சி அல்லது உரிமை அவ்வாறுக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த இரட்டை மொழிப் பாடத் திட்டத்தின் கீழ், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதில் மலாய் மொழி அல்லது ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டுமா என்பது பெற்றோரின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது.

அப்படியிருக்க, குறைந்தபட்சம் ஒரு வகுப்பிலாவது மலாய் மொழியில் கற்பிப்பது கட்டாயம் என்று கல்வி அமைச்சு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த திடீர் கட்டாயத் திணிப்பு, ‘பெற்றோர் தேர்வு’ கொள்கைக்கு எதிரானது என உரிமையின் தலைவரும் பினாங்கின் முன்னால் துணை முதல்வருமான பேராசிரியர் ராமசாமி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மலாய் மொழியில் கற்பிக்கும் வகுப்பில் மாணவர்களோ, பெற்றோர்களோ ஆர்வம் காட்டவில்லை என்றால், கல்வி அமைச்சு என்ன செய்யப் போகிறது? யாரைத் தண்டிக்கும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொள்கை முடிவுகளில் ஏற்படும் மாற்றங்களை தன்னிச்சையாக பள்ளிகளில் குறிப்பாக தாய்மொழிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த முடியாது.

எனவே, கல்விக் கொள்கைகளில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் சிந்திக்குமாறு கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடேக்கை ராமசாமி வலியுறுத்தியிருக்கிறார்.

அண்மையில் பள்ளி வாரிய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் உறுப்பினர்கள் உட்பட பினாங்கில் உள்ள 11 தேசிய மற்றும் தாய்மொழிப் பள்ளிகளின் வாரிய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் DLP திட்டத்தில் புதிய உத்தரவுக்கு எதிராக கூடி மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!