Latestமலேசியா

e-hailing, p-hailing தொழிலாளர்களுக்கு RM160 மில்லியன் உதவித் திட்டம்

கோலாலம்பூர், அக்டோபர்-22,நாட்டிலுள்ள e-hailing மற்றும் p-hailing தொழிலாளர்களின் வருமானத்தையும் நலனையும் மேம்படுத்த, அரசாங்கமும் Grab நிறுவனமும் இணைந்து 160 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித் திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தவுள்ளன.

தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் இதனைத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம், நடுத்தர வருமானப் பிரிவைச் சேர்ந்த e-hailing ஓட்டுநர்களின் நிகர மாத வருமானம் 227 ரிங்கிட் வரையிலும், p-hailing உணவு விநியோக ஊழியர்களின் வருமானம் சுமார் 100 ரிங்கிட் வரையிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கிக் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வருமானம், அதனைக் கணக்கிடும் முறை மற்றும் சமூகப் பாதுகாப்புத் தரநிலைகளை நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

கிக் ஆலோசனை மன்றம் மேற்கொண்டு வரும் இப்பேச்சுவார்த்தைகள் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறுதிச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, ஃபாட்மி சொன்னார்

தற்போது மலேசியாவில் சுமார் 600,000 பேர் e-hailing மற்றும் p-hailing துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

எரிபொருள், வாகனப் பராமரிப்பு, காப்புறுதி உள்ளிட்ட செலவுகளால் பாதிக்கப்படும் இவர்களின் நிகர வருமானத்தை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!